தமிழக செய்திகள்

த.வெ.க..நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் - சேகர் பாபு விமர்சனம்

தி.மு.க வழக்குகளை கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை தரக்குறைவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜெகதீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல்,

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சேகர் பாபுவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான சேகர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க வழக்குகளை கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல.. தோல்வியிலும் வெற்றியை கண்டது தி.மு.க. வெற்றியிலும் தோல்வியை கண்டது த.வெ.க.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் தான் அவர்கள்.

முதல்-அமைச்சரை அந்தளவுக்கு இயக்கியதே எங்கள் தலைவர் தான்.. 5 நிமிடம் பேசினாலே அதுவாகிவிடும் இதுவாகிவிடும் என்று பேசியவர் இன்று சுற்றிச் சுற்றி வருகிறார் என்றார்.

SCROLL FOR NEXT