காஞ்சிபுரம்
த.வெ.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட த.வெ.க. தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கட்சி பொறுப்புகளில் பாரபட்சம் காட்டுவதாக கூறி த.வெ.க. எம்.எல்.ஏ. முனிரத்தினம் என்பவரை கண்டித்து, வாலாஜாபாத் சாலையில் அக்கட்சியை சேர்ந்தவர்களே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர். இதனால் வாலாஜாபாத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.