தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் த.வெ.க.வினர் ரீல்ஸ்: அ.தி.மு.க. கண்டனம்

இதுதான் நீங்க சொன்ன அந்த மாற்றமா விஜய் சார் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ் எடுத்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்:-

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு வகுப்பறையில் முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படத்தை சுவரில் மாட்டி அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்ட தவெக ஆச்சரியக்குறிகள்..

இதுதான் நீங்க சொன்ன அந்த மாற்றமா விஜய் சார்!

நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்...

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.