தமிழக செய்திகள்

தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது: செல்லூர் ராஜு தாக்கு

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் கடுகளவும் இல்லை என்று செல்லூர் ராஜூ கூறினார்.

செல்லூர் ராஜூ பேட்டி

குதிரை பேர விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மேயர் பி.எம்.மன்னனை, மதுரை மத்திய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், மன்னனை கைது செய்துள்ளனர். என்னையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.முஸ்தபாவும், மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மைத்துனன் என்ற அடிப்படையில் பேசியுள்ளனர். த.வெ.க. நிர்வாகிகள், கட்சி பதவிக்கு பணம் வாங்குவதாக ரீல்ஸ் வருகிறதே என முஸ்தபாவிடம் மன்னன் பேசியுள்ளார்.

மன்னன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குதிரை பேரத்தினால்தான் த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு எதுவும் செய்யாத அரசாக உள்ளது. பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட் சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் இல்லை. நாங்கள் மக்களை சந்திப்போம். குறுக்குவழியில் ஆட்சியமைக்க அவசியமில்லை. விரைவில் இந்த ஆட்சியே கவிழப்போகிறது.

முஸ்தபா ஒன்றும் யோக்கியர் அல்ல, அரிச்சந்திரனும் கிடையாது. அவர் ஜாக்பாட்டில் மதுரை மத்திய தொகுதியில் வெற்றிபெற்றார். கவுன்சிலர் சீட்டுக்கு பணம் கேட்டவர். தமிழ கத்தில் விலைவாசி உயர்வை மறைக்க இதுபோன்ற விஷயத்தை கிளப்பி விடுகிறார்கள். மன் னன் மீதான கைது நடவடிக்கையை அ.தி.மு.க. சார்பில் கண்டிக்கிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக, மன்னனுக்கு 7-ந்தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப் பப்பட்டு உள்ளது. அதற்குள் கைது செய்துவிட்டார்கள். த.வெ.க.வினர் போல் அவர் போதைப்பொருள் விற்பவரல்ல.மன்னனை அடைத்து வைத்துள்ளனர். அவர் இப்போதுதான் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரை வைத்து இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிைடயாது. கட்சியும் அப்படி கிடையாது. மவுன முதல்-அமைச்சர் விஜய் மட்டும்தான். அரசு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவே இதற்கு சாட்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT