சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதல்-அமைச்சர் விஜய் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது.
பாலியல் வன்கொடுமைகளின் கூடாரமாகத் தமிழகம் உருமாறுவதை உடனடியாக தவெக அரசு தடுக்க வேண்டும்! ரீல்ஸ் வெளியிடுவதில் குதிரை வேகத்திலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆமை வேகத்திலும் செயல்படுவதை விடுத்து, உடனடியாக தமிழகப் பெண்கள் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.