தமிழக செய்திகள்

நாளை திருச்செந்தூர் செல்கிறார் விஜய்

இதற்காக இன்று இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் மதுரைக்கு செல்கிறார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காகப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய்மதுரைக்கு செல்கிறார். மதுரையில் இரவு தங்கும் அவர், நாளை காலை அங்கிருந்து கார் மூலமாக சாலை மார்க்கமாக திருச்செந்தூர் புறப்படுகிறார்.

அங்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். கட்சி தொடங்கிய பிறகு ஆன்மீகத் தலங்களுக்கு அவர் செல்வது அக்கட்சியினரிடையே முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT