தமிழக செய்திகள்

தவெக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்; செங்கோட்டையன்

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திண்டுக்கல்,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனித்துப்போட்டியிட்டது. இதனிடையே, தவெக தலைவர் விஜய் இன்று காலை திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தவெக வேட்பாளருமான செங்கோட்டையன் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நாளைய தமிழகத்தை ஆளப்போகும் முதல்வர் இன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இன்று ஒரு சிறந்த நாள். அவரின் தொலைநோக்கு சிந்தனை நாளை தமிழகத்தை ஆளும். மக்கள் ஒருமனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, இனப்புரட்சி, சமூக புரட்சி போல் வரும் 4ம் தேதி தமிழகத்தில் விஜய்-இன் விசில் புரட்சி வர உள்ளது. தேர்தலில் தவெக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்

என்றார்.