திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ”சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறும். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சோசலிச புரட்சி போல மே 4-ம் தேதி விசில் புரட்சி நடைபெற உள்ளது. விசில் புரட்சியால் தவெக அரியணையில் அமரும். யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது.”என்று அவர் கூறினார்.
செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது; “விசில் சத்தம் வேறு, குண்டு சத்தம் வேறு. தம்பி விஜய் கொஞ்சம் இதை உணரணும். 4ஆம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும். தற்போது ஆன்மீகத்தை தேடி செல்லும் விஜய் அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வாரோ என்று சந்தேகமாக உள்ளது.”என்று அவர் தெரிவித்துள்ளார்.