சென்னை,
சட்டசபையின் நேற்றைய நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முதல்-அமைச்சர் விஜய் அளிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அனல் தெறிக்க அவர் தனது பதிலுரையை வழங்கினார்.
நேற்று சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற த.வெ.க. பெண் அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் ஒரேநிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தனர். அதாவது இளஞ்சிவப்பு நிறத்திலான சேலையை அணிந்து வந்து சட்டசபையை அலங்கரித்தனர். அதன்படி, அமைச்சர்கள் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தனர். இதில் தாஹிரா எம்.எல்.ஏ. மட்டும் அந்த நிறத்தில் சேலை அணிந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி தன்னுடைய குழந்தையுடன் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்ததாகவும், அப்போது முதல்-அமைச்சர் விஜய் பல்லவி குழந்தையின் உடையில் 'பிரியமுடன் விஜய்' என பச்சை இங்கில் கையெழுத்திட்டிருந்தார்.