தமிழக செய்திகள்

‘பிரதமர் வேட்பாளர் குறித்த த.வெ.க.வின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது’ - ஐ.பெரியசாமி

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பாக்கி இருந்தது என ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் விஜய் இதுவரை பா.ஜ.க.வைப் பற்றியை வாயை திறக்கவே இல்லை. தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி இருந்தது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதுவரை இது குறித்து தமிழக அரசு எதுவும் அறிவிக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க.வினர் செய்து வரும் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT