திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் நேற்று இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கிடந்தன. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சமயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் போலீசார், சடலங்கை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் ராகுல் (17), விஷால் (17) என்பது தெரிய வந்திருக்கிறது. இருவரும் அந்த பகுதியில் கூலிவேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுவர்கள் இருவரையும் கொலை செய்தது யார், எதற்காக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக மற்றும் பழிக்கு பழீயாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் குறித்த முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தீபாவளி நாளில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.