தமிழக செய்திகள்

தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த 2 பேர் கைது!

2 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.90.33 லட்சம் மதிப்பிலான 591 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் கடத்தல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த 2 ஆண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்து 591 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.90.33 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 2 பயணிகளையும் சுங்கத்துறையினர் கைது செய்து, தங்கம் கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT