திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் பொன்பாண்டி (வயது 20) மற்றும் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஸ்ரீனிவாசபெருமாள்(21) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், மேற்சொன்ன 2 வாலிபர்கள் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.