தமிழக செய்திகள்

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு

மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது.

ஈரோடு,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, வீரபாண்டி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வருகிற 15, 18-ந்தேதிகளில் எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

மேலும் ஆலப்புழா -தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.