தமிழக செய்திகள்

அக். 25-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே 2 விமானங்கள் இயக்கம்

சேலம்-சென்னைக்கு ஒரு விமான சேவை மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 விமானங்கள் இயக்கப்பட உள்ளது

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து தின மும் சேலம்-சென்னை, சென்னை-சேலம் என (இண்டிகோ) ஒரு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து பெங்களூரூ, ஐத ராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, சேலம் மற்றும் சென்னை இடையே அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி முதல் தினமும் 2 நேரடி விமானங்களை ' இயக்க இண்டிகோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனால் இரு நகரங்க ளுக்கும் இடையே பயணிக்கும் தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், அக்டோபர் 25-ந் தேதி முதல், சென்னையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சேலம் வந்தடையும். இந்த விமானம் சேலம் விமான நிலை யத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.35 மணிக்கு சென்னை சென்றடைகிறது. அதேபோல 2-வது விமானம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சேலத் திற்கு வந்தடையும். அதன்பிறகு இந்த விமானம் சேலத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. என்றனர்.

சேலம்-சென்னைக்கு ஒரு விமான சேவை மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 விமானங்கள் இயக்கப்பட உள்ளது பொருளாதார ரீதியாகவும், தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக இருக்கும் என வர்த்தக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT