தென்காசி,
திருவேங்கடம் அருக கிணற்றில் தத்தளித்த 2 குள்ளநரிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருவேங்கடம் அருகே உமையத்தலைவன்பட்டி மகாத்மாகாந்தி நகரில் உள்ள பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று மாலையில் அந்த கிணற்றில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, கிணற்றில் 2 குள்ளநரிகள் விழுந்து தத்தளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கயிறு கட்டி ஒரு குள்ள நரியை மீட்டனர். மற்றொரு குள்ளநரி கிணற்றின் இடுக்கான பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து இரவில் மின்விளக்கு பொருத்தி, மற்றொரு குள்ளநரியையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவற்றை வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்தனர்.