தமிழக செய்திகள்

ஆண்டிபட்டி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு

ஆண்டி பட்டி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெற்கு மூனாண்டி பட்டியைச் சேர்ந்தவர் முத்து முருகன் மனைவி முருகேஸ்வரி (34). இவரது கணவர் முத்து முருகன் நேற்று சொந்த வேலை காரணமாக ஆண்டிபட்டிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, வடக்கு மூனாண்டிபட்டியைச் சேர்ந்த தினகரன் மகன் சுபாஷ் (36) என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து, புள்ளிமான் கோம்பை ரோட்டில் ஆண்டிபட்டியை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

விபத்து

அப்போது அணைக்கரைபட்டி அருகே செல்லும் வழியில் எதிரே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர், வாகனத்தை அதிவேகமாகவும், கவனகுறைவாகவும் ஓட்டி வந்து பைக் மீது மோதியதில் பைக்கில் இருந்து கீழே விழுந்தவர்கள் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆண்டி பட்டி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர், இது குறித்து சரக்கு வாகன ஓட்டுநர் வடக்கு மூனாண்டிபட்டியைச் சேர்ந்த ஆயிரம் மகன் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT