தமிழக செய்திகள்

புதுக்கோட்டை அருகே கார் - தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 2 பேரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை,

தனியார் பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஜாதகம் பார்ப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறவாமதுரை விலக்கு பகுதியில் எதிரே வந்த தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதியது .

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் கார்த்திக் கைது செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT