தமிழக செய்திகள்

சவூதி அரேபியாவில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு..!

சவூதி அரேபியாவில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சவுதி,

சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத் தொடங்கினர்.

இந்தச் சண்டையில் பாதுகாப்புபடை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சவுதி பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். தாக்குதலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்கர்கள், அமெரிக்க ஸ்டாப்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையொட்டி தூதரகம் மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது