தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தீ- 2 மாணவர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் 2 மாணவர்கள் இறந்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் எஸ்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 18), திருச்செல்வன் (21). இவர்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கல் லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூரு வுக்கு சென்று விட்டு, பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி (வயது 24), அவருடைய சகோதரர் வேலு (18). இவர்கள், பழைய செல்போன்கள், பழைய பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை பெங்களூருவில் விற்பனை செய்வதற்காக, அதிகாலையில் மோட்டார் சைககிளில் புறப்பட்டனர்.

தீப்பிடித்தது

பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில், திருப்பதி, திருச்செல்வன் ஆகிய இருவரும் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சாரதி, வேலு ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் சாலை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய மற்றும் பழைய செல்போன்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு வாகனங்களும் மோதியதில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பி டித்ததா? அல்லது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விட்டு சென் றதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT