சேலம்,
சேலம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்து உள்ளனர். இந்நிலையில், விரகனூர் பகுதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று அவர்களது வாகனம் மீது மோதி விட்டு சென்றது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சந்திரா, சக்திவேல் மற்றும் நித்யா ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.