தமிழக செய்திகள்

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்: உதயநிதி திறந்து வைத்தார்

நூலகத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திட வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இளைஞர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக இளைஞர் அணிசார்பில், கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கழக இளைஞர் அணி நிர்வாகிகளால் அமைக்கப்பட்டுள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தை இன்று திறந்து வைத்தோம்.

அன்றாடச் செய்திகளை அறிய பத்திரிகைகள், அறிவை விரிவு செய்யும் நூல்களுடன் இயங்கும் இந்நூலகத்தை அப்பகுதி பொதுமக்கள் நன்கு பயன்படுத்திட என் அன்பும் வாழ்த்தும்!. என தெரிவித்தார்.