தமிழக செய்திகள்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி: உதயநிதி வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி வருகிறோம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் நமது வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி வருகிறோம்.

அந்த வகையில், SDAT-யின் Sports Hostel of Excellence-யை சேர்ந்த ஜூடோ வீரர்கள் தம்பி ஆகாஷ்ராஜ் மற்றும் தம்பி ஈஸ்வர்மூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ 45,000 மதிப்பிலான உபகரணம், பாரா கிரிக்கெட் வீரர் தம்பி சண்முகத்துக்கு ரூ1.28 லட்சம் மதிப்பில் உபகரணம்,

வாள்வீச்சு வீராங்கனை தங்கை தர்ஷினி மற்றும் நீச்சல் வீராங்கனை தங்கை ஹர்ஷா ஆகியோருக்கு தலா ரூ 1 லட்சத்திற்கான உபகரணங்கள்,

சிலம்பம் வீரர் ஹரிஹரனுக்கு மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வதற்காக ரூ 75,000க்கான காசோலை, என மொத்தம் ரூ 4.93 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் நிதியுதவியினை இன்று நாம் வழங்கினோம்.

அவர்களுக்கு அன்பும், வாழ்த்தும்! என தெரிவித்துள்ளார்.