தமிழக செய்திகள்

50வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

50வது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரன் ஆவார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் மரியாதை

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தனது தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றை உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள அண்ணா நினைவிடம் மற்றும் தனது தாத்தா கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT