சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறையில் உள்ள அன்பில் மகேஷை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.