தமிழக செய்திகள்

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துகள்: டிடிவி தினகரன்

உகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

உகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உகாதியை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறானதாக இருந்தாலும், வாழும் இடம் தமிழ்நாடு தான் என்ற உணர்வோடு, பலநூறு ஆண்டுகள் கடந்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் நல்ல உறவைப் பேணி, நட்புறவு கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை வழங்குவதோடு, அவர்களுக்கும் தமிழக மக்களுக்குமான நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.