தமிழக செய்திகள்

அனுமதியின்றி தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம்: சோத்துப்பாறை அணை மதகுக்கு புதிய பூட்டு போட்ட அதிகாரி

புதிய பூட்டுக்கான 2 சாவிகளையும் அதிகாரியே எடுத்துச்சென்றார்.

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி புதிய ஆயக்கட்டு விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதகை த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திறந்தனர். மதகை திறந்தது தொடர்பான வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதால் சர்ச்சை ஏற்பட்டது.

புதிய பூட்டு

இதற்கிடையே அனுமதி பெறாமல் மதகை திறந்ததாக பொதுப்பணித்துறையினர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த மதகின் பூட்டுக்கு 2 சாவிகள் இருந்தன. ஒரு சாவி நீர் வளத்துறை அதிகாரிகளிடமும், மற்றொரு சாவி ஆயக்கட்டு விவசாயிகளிடமும் இருந்தது. இந்தநிலையில் நேற்று சோத்துப்பாறை அணை உதவி பொறியாளர் மனோஜ்குமார் பழைய பூட்டை அகற்றிவிட்டு புதிய பூட்டு போட்டார். மேலும் 2 சாவிகளையும் அவரே எடுத்து சென்றார்.

SCROLL FOR NEXT