சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை மந்திரி அமித்ஷா, இன்று 62-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.