சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 10.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06195), மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து செவ்வாய்கிழமை காலை 11.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரெயில் (06196), அதேநாள் இரவு 7.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.