தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. போத்தனூருக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06179) புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூரை அடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 9.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (06161) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மதுரையை சென்றடையும்