தமிழக செய்திகள்

திருப்பதி - சென்னை இடையே 20ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்!

சென்னை - ரேணிகுண்டா இடையே முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு கடற்கரை ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருப்பதி - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில்

ரெயில் எண் 07610 திருப்பதி - சென்னை கடற்கரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும்.

இந்த ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் ஒரு சேவை மட்டும் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை - ரேணிகுண்டா சிறப்பு ரெயில்

ரெயில் எண் 07609 சென்னை கடற்கரை - ரேணிகுண்டா முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இந்த ரெயில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இதுவும் ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படும்.

SCROLL FOR NEXT