சென்னை
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேற்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்கள், மருத்துவமனையின் மேம்பட்ட ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் மாற்று சிகிச்சை மையத்திற்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற ரத்த ஒளி சிகிச்சை கருவியை வழங்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் அருண்ராஜ் திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், '284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்களை உருவாக்கிட பணிகள் நடந்து வருகின்றன.
நீட் தேர்வுக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டை அந்த குழுவிடம் தெரிவித்துள்ளோம். கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து கூடிய விரைவில் அறிக்கையை வெளியிடுவோம்' என்றார்.