தமிழக செய்திகள்

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை - எல்.முருகன்

ஒவ்வொரு இந்தியருக்கும் இது அளவற்ற பெருமிதம் தரும் தருணமாகும்.

சென்னை,

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை மத்திய இணை-மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

உயரிய அரச விருது

இந்தியாவுக்குப் பெருமைக்குரிய தருணம்! உஸ்பெகிஸ்தான் குடியரசின் மிக உயரிய அரச விருதான 'ஒலிய தராஜலி தோஸ்த்லிக்' விருதை பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு வழங்குவது, தேசத்திற்கு ஒரு பெரும் கௌரவமாகும்.

பெருமிதம் தரும் தருணம்

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே வலுப்பெற்று வரும் நட்புறவு, நம்பிக்கை மற்றும் உத்திசார் கூட்டாண்மைப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது அளவற்ற பெருமிதம் தரும் தருணம்!.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.