சென்னை,
வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06155) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூரில் இருந்து வரும் 30-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06156) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (28-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.