தமிழக செய்திகள்

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு வைகோ தொலைபேசியில் வாழ்த்து

அண்ணனின் வாழ்த்து எப்போதும் எனக்கு உத்வேகமாய் அமையும்’ என்று நன்றி தெரிவித்தேன் என வன்னி அரசு தெரிவித்தார்.

சென்னை,

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு அமைச்சராக மே 22, 2026 அன்று பொறுப்பேற்றார்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தம்பி வன்னி அரசு.. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மட்டுமல்லாமல் தமிழீழத்தின் சார்பாகவும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கீங்க.. சிறப்பா பணியாற்றுங்க

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்காக வாழ்த்து கூறினார். 'அண்ணனின் வாழ்த்து எப்போதும் எனக்கு உத்வேகமாய் அமையும்’ என்று நன்றி தெரிவித்தேன்.

இவ்வாறு அதில் கூறினார்.

SCROLL FOR NEXT