தமிழக செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் வைகோ சாமி தரிசனம்

தஞ்சை பெரிய கோவிலில் சிவபுராண பாடல் வரிகளை பாடி வைகோ வழிபாடு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தஞ்சை வந்துள்ளார். இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலுக்கு வைகோ வருகை தந்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர்.

சிவபுராணம் பாடிய வைகோ

கோவிலில் அர்ச்சனை செய்வதற்காக வைகோவிடம் பெயர், ராசி கேட்கப்பட்டபோது, ‘தேவாரம், திருவாசகம் சொல்லத் தெரியாதா?’ என்று கேள்வி எழுப்பிய வைகோ “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்ற சிவபுராண பாடல் வரிகளை பாடிக் காட்டினார்.

மனமுருகி வழிபாடு

இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார், “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற திருவாசக பாடல் வரிகளைப் பாடி சிவபெருமானுக்கு தமிழில் அர்ச்சனை செய்தார். இதையடுத்து வைகோ கருவறை முன்பு மண்டியிட்டு தஞ்சை பெருவுடையாரை மனமுருகி வழிபாடு செய்தார்.

SCROLL FOR NEXT