சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பல ஆண்டுகளாக சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தொடங்கிய இந்த பணி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் மக்களுடன் இணைந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
.
ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 13-ம் தேதியில் இருந்து மாவட்டந்தோறும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, நாளை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, மின்சார வாரிய அலுவலகம் தேனி-மதுரை மெயின் ரோடு எஸ்.எஸ்.புரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.