தமிழக செய்திகள்

முதல் - அமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வழங்கி, தமிழக மக்களின் நலனுக்காக உழைத்திட வாழ்த்துகள்.

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல் - அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவருடன் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வழங்கி, தமிழக மக்களின் நலனுக்காக உழைத்திட வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.