தமிழக செய்திகள்

தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகளை வைத்த வானதி சீனிவாசன்

மத்திய அரசின் நெப் 2020, பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகள் திட்டங்களை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகள் என்ற தலைப்பில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகள்

கோரிக்கை எண் : 1

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலகத்தர கல்வி

அரசுபள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் மொழித்திறன் வித்தியாச நிலை மாற மத்திய அரசின் நெப் 2020, பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகள் திட்டங்களை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும்.

6-ம் வகுப்பு முதல் ஸ்போக்கன் இங்கிலிஷ், கோடிங், ரொபேட்டிக்ஸ், ஏஐ பேசிக்ஸ், பாடங்களை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT