சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடன் மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.