தமிழக செய்திகள்

வண்டலூர் பூங்கா: சிங்கம் மற்றும் மான் சபாரி வசதி 14ம் தேதி வரை நிறுத்தம்!

பராமரிப்பு பணிகள் முடிந்ததும் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சிங்கம் மற்றும் மான் சபாரி வசதி 14ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

வண்டலூர் பூங்கா

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள இந்த பூங்கா சுமார் 1,260 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.150-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் இங்கு முதலை, பாம்பு, ஆமை உள்ளிட்ட பல்வேறு ஊர்வன இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் கல்வி மையமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. பாதுகாப்பான வாகனங்களில் பயணித்து சிங்கம், புலி போன்ற விலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது.

சவாரி வசதி நிறுத்தம்

இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி வசதி 14ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்ததும் சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT