நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது - நயினார் நாகேந்திரன்

நமது பாரதத்தின் மீது காங்கிரஸ் கொண்டுள்ள அதீத வெறுப்பே அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது என்று என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வந்தே மாதரம்

நமது பாரதத்தை தேசியத்துடனும் தெய்வீகத்துடனும் பொருத்தி பார்ப்பதற்கு தயங்குபவர்கள், தேசத்திற்கு எதிரானவர்கள்! நமது பாரதம் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், இசுலாமியர்களின் நற்மதிப்பை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் கடந்த 1937 ஆண்டு, "வந்தே மாதரம்" பாடலின் சில வரிகளை நீக்கியது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்.

பிளவுவாத அரசியல்

நமது நாடு விடுதலை அடைந்து சுதந்திர காற்றை சுவாசித்தாலும் கூட, அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி தனது "பிளவுவாத அரசியலில்" இருந்து மீண்டு வரவில்லை போல.

அதீத வெறுப்பு

அதனால் தான், நமது தாய்த்திருநாட்டின் மீதான பக்தி, விடுதலைப் போராட்டம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் "வந்தே மாதரம்" பாடலை, காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. நமது பாரதத்தின் மீது காங்கிரஸ் கொண்டுள்ள அதீத வெறுப்பே அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.