தமிழக செய்திகள்

ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பள்ளி வகுப்பறைகளுக்கான பல்வேறு கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

”தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி; இராணிப்பேட்டை மாவட்டம் - மேல்வெங்கடாபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், சென்னை மாவட்டம் – திருவொற்றியூர் ஆகிய இடங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 42 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள்;

தருமபுரி மாவட்டம் - செட்டிக்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துவாக்குடி, சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி, தேனி மாவட்டம் – வீரபாண்டி, மதுரை மாவட்டம் – செக்கானூரணி, கோயம்புத்தூர் மாவட்டம் – தொண்டாமுத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் – தென்னாங்கூர், செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கம், சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களிலுள்ள அரசு கல்லூரிகளில் 45 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 34 வகுப்பறைகள் 19 ஆய்வகங்கள், பணிமனை, மகளிர் விடுதி மற்றும் இதர கட்டடங்கள்;

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐந்து அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 255 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 திறன்மிகு மையங்கள்;

அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்காக, 198.84 கோடி ரூபாய் செலவில் கற்றல் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருள்;

என மொத்தம் 542.02 கோடி ரூபாய் செலவிலான உயர்கல்வித்துறை சார்ந்த 15 கட்டடங்களை திறந்து வைத்து, ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், ஈரோடு மாவட்டம் – அந்தியூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம்- நத்தம், திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூர், பெரம்பலூர் மாவட்டம் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, கடலூர் மாவட்டம் – பண்ருட்டி ஆகிய இடங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 180 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்கள்;

தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, செங்கிபட்டி, திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி, கடலூர் மாவட்டம் – சிதம்பரம், திட்டக்குடி, கடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் – திட்டமலை, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டம் – கடையநல்லூர், விருதுநகர் மாவட்டம் – சிவகாசி, திண்டுக்கல் மாவட்டம் – நிலக்கோட்டை, சென்னை – நந்தனம், மாநிலக் கல்லூரி, தரமணி, இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி, நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம், செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கம், குரோம்பேட்டை, நாமக்கல் மாவட்டம் – இராசிபுரம், நாமக்கல், தர்மபுரி மாவட்டம் – அரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – லால்குடி, சேதுராபட்டி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி, தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர், திருப்பத்தூர் மாவட்டம் – ஜோலார்பேட்டை, அரியலூர் மாவட்டம் – கீழப்பழுவூர், அரியலூர், மயிலாடுதுறை – சேலம் - கரூர் - வேலூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் 375 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 437 வகுப்பறைகள், 19 பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதர கட்டடங்கள்;

என மொத்தம் 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.