தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்விவரம் பின்வருமாறு:-

1. காட்டுமன்னார்கோவில் (தனி) - திருமாவளவன்

2. செய்யூர் (தனி) - சிந்தனைச்செல்வன்

3. திருப்போரூர் - பன்னீர்தாஸ்

4. அரக்கோணம் (தனி) - எழில் கரோலின்

5. திண்டிவனம் (தனி) - வன்னியரசு

6. பெரியகுளம் (தனி) - சக்திவேல்

7. கள்ளக்குறிச்சி (தனி) - மாலதி

8. பண்ருட்டி - அப்துல் ரகுமான்