தமிழக செய்திகள்

விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விசிக மாநாட்டில் திருமாவளவன் பேரூரை ஆற்றுகிறார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.15 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன. இதையடுத்து 4 முன்னணி தலைவர்களின் உரை, இடம் பெறுகிறது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணி வரை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரூரை ஆற்றுகிறார்.

திருமாவளவன் தொண்டர்களை சந்திப்பதற்காக 'ரேம்ப் வாக்' செல்லும் வகையில் சுமார் 700 அடி நீள நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா உள் ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அலங்கார வளைவுகள், கட்சி கொடிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், விசிக மாநாட்டையொட்டி மாணவர்கள் நலன், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டை நகரத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார். வி.சி.க. மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சர்ச்சையை கிளப்பி உள்ளது.