சென்னை,
தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 33 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இன்னும் 2 அமைச்சர்கள் அதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தலா ஒரு இடத்தை வழங்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.
நேற்று அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஒப்புதலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, முதல்-அமைச்சர் விஜய்யிடம் கொடுத்து விட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒப்புதல் கடிதத்தை கொடுத்ததாக தெரிகிறது.
எனவே கவர்னர் மாளிகையில் இந்த 2 அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசும் அமைச்சர்களாக இன்று பதவியேற்கிறார்கள்.