சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்த தமிழக அமைச்சரவை அளித்துள்ள ஒப்புதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இது தொடர்பாக நேற்று வி.சி.க. உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக நான் டெல்லி செல்கிறேன்.
நவம்பர் 1-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பங்கேற்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.