தமிழக செய்திகள்

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை: நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி மீளவிட்டான் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீளவிட்டான் பகுதியில் யாதவர் சமுதாய மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பலர் கல்நது கொண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.