தமிழக செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கின்றன.

தேனி

தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் 15-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறை, செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) மாற்று வேலை நாளாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.