சென்னை,
வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் காய்கறி தேவைக்கு அண்டை மாநிலங்களாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறி லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன. தற்போது, அங்கு விளைச்சல் இல்லாததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து சரிந்துள்ளது. இதனால், விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை கடைகளில் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பீன்ஸ் - ரூ.90 - ரூ.120
கேரட் - ரூ.60 - ரூ.100
பீட்ரூட் - ரூ.25 - ரூ.50
முருங்கை - ரூ.70 - ரூ.100
தக்காளி - ரூ.26 - ரூ.30
பெரிய வெங்காயம் - ரூ.34 - ரூ.42
சின்ன வெங்காயம் - ரூ.85 - ரூ.100
கத்தரிக்காய் - ரூ.60 - ரூ.80
வெண்டைக்காய் - ரூ.60 - ரூ.80
தேங்காய் (கிலோ) - ரூ.50 - ரூ.60
முள்ளங்கி - ரூ.40 - ரூ.60
கோவங்காய் - ரூ.45 - ரூ.70
சேனைக்கிழங்கு - ரூ.50 - ரூ.80
வாழைக்காய் (ஒன்று) - ரூ.11- ரூ.14
காளிபிளவர் (அளவை பொருத்து) - ரூ.25, ரூ.30, ரூ.35, ரூ.40
இஞ்சி - ரூ.150 - ரூ.180
மிளகாய் - ரூ.40 - ரூ.70
மாங்காய் - ரூ.25 - ரூ.50
மண் உருளை - ரூ.24 - ரூ.46
ஆக்ரா உருளை - ரூ.16 - ரூ.30
பூண்டு - ரூ.250 - ரூ.280
இவ்வாறு காய்கறி விலை உயர்ந்தது குறித்து, சென்னை தாம்பரத்தில் காய்கறி கடையில் வேலை பார்க்கும் ச.நித்யானந்தன் கூறும்போது, "ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த விலை உயர்வு தொடர வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பயிரிடப்படும் காய்கறி விளைந்து சந்தைக்கு வரத் தொடங்கும்போது விலை குறைய வாய்ப்பு உள்ளது" என்றார்.